ETV Bharat / city

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு: ஈபிஎஸ் பதிலளிக்க உத்தரவு - ops

ஜூலை 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jul 7, 2022, 9:26 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று (ஜூன் 07) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி நேற்றைய (ஜூன் 06) உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்துப் பார்த்த நீதிபதி, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கில் தான் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு விளக்கமளித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கட்சியில் இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் யார் கையெழுத்தும் இல்லை என்பதால், ஜூலை 11 பொதுக்குழு நோட்டீசே செல்லாதது, என தெரிவித்தனர்.

கடந்த ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததால் அவர்களால் செயல்பட முடியாது எனக் கூறி ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர்கள் வாதிட்டனர்.

இடைக்கால பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்ய இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது எனக் கூற முடியாது எனவும் வாதிட்டனர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடத்த அனுமதித்துள்ள நிலையில் வேண்டுமென்றே அதை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் போது, பன்னீர்செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என வாதிட்டனர். இன்றைய நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரினர்.

கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்?

பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை (ஜூலை 08) பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி மனு கொடுத்தவருக்கு அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.