ETV Bharat / city

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்

author img

By

Published : May 22, 2020, 1:01 AM IST

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு மையம் திறக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

chennai central
chennai central

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது குறிப்பிட்ட சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதற்கு இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இந்த நிலையில், பயணிகள் சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய ஏதுவாக, தற்போது இயக்கப்படும் ரயில்கள் மற்றும் ஜுன் 1 முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு இன்று (22-05-2020) காலை 8 மணி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக குறைந்தபட்சம் இரண்டு டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும்.

இந்த மையங்களில் முன்பு பதிவு மட்டுமே செய்ய முடியும், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்சமயம் திரும்பப்பெற இயலாது.

முன்பதிவு செய்ய கவுண்டர்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக விலகலைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.