ETV Bharat / city

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதை தடுக்க தனிக்குழு அமைக்க கோரிக்கை - prevent Plaster of Paris

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதை தடுக்க தனிக்குழு அமைக்க கோரிக்கை

author img

By

Published : Aug 19, 2022, 10:51 AM IST

Updated : Aug 19, 2022, 1:54 PM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" மூலம் விநாயகர் சிலைகள் தயாரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறதா என்பதை தனிக்குழுவை அமைத்து காவல்துறை கண்காணிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, விநாயகர் சதுர்த்தியின்போது இந்து அமைப்புகள் நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட "பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்" கொண்டு விநாயகர் சிலைகளை உருவாக்குவதையும், பின் அதை நீர் நிலைகளில் கரைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும், பொதுமக்களுக்கும் ஊறு விளைவிக்கும் செயல்களை மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், இந்து மத வழிபாடுகளை எதிர்ப்பது எங்கள் நோக்கம் இல்லை என்ற அவர், அரசு அனுமதித்தபடி 10 அடிக்குள், மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்தி மக்கள் நலன் காக்கப்பட வேண்டும். இதுவே தங்கள் நோக்கம் எனவும், இதை உறுதிபடுத்த காவல்துறை தனிக்குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும், காவல்துறை தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆகஸ்ட் 21 இல் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

Last Updated : Aug 19, 2022, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.