சென்னை: அரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் அதிமுக நிர்வாகி தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி மாதம் முந்தைய அதிமுக அரசால் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிய போது, அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும், நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்கக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மீறும் வகையில் தற்போது கரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டுவருகின்றனர். நியாய விலைக் கடைகளுக்கு அருகே திமுகவினர் பேனர்கள் வைக்கின்றனர். அரசு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். நியாய விலைக் கடை அருகே ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்கத் தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது, நிவாரண உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-relieffunddistribution-script-7204624_24052021162319_2405f_1621853599_743.jpeg)
இதையும் படிங்க: ' என் உயிருள்ளவரை..' - கர்ஜிக்கும் குரலில் கமல் ஹாசன்