ETV Bharat / city

'பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால பணப் பயன்களை குறைத்து பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்க' - Chennai high court

சென்னை: பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால பணப் பயன்களை குறைத்து பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Reduce gratuity of maternity periods, notice to central, MHC

author img

By

Published : Jun 21, 2021, 7:15 PM IST

கடந்த 1961ஆம் ஆண்டு மகப்பேறு பயன் சட்டம் இயற்றபட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் முழு ஊதியம், பணப் பயனாக வழங்க வகை செய்யபட்டது.

இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தில் புதிய விதியை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதில், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, ஊக்கத் தொகை ஆகியவற்றை கழித்துவிட்டு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே பண பலனாக வழங்கப்படும் என அறிவிக்கபட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அகில இந்திய பணிபுரியும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வகிதா பர்வின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இதுவரை 100 விழுக்காடு ஊதியம், மகப்பேறு பயனாக வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது அதைக் கடுமையாக குறைத்ததால் பெண்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.