தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர், ஆய்வக நுட்புனர்கள் (லேப் டெக்னீசியன்) அரசு நியமனம்செய்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக 675 மருத்துவர்களை மூன்று மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்செய்ய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவ தேர்வாணையத்தில் பதிவுசெய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாகப் பணியில் சேரவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மூன்று மாத காலம் பணி தேவைக்கு ஏற்றவாறு பணி நீட்டிப்பு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் மூலம் நியமிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள 675 மருத்துவர்களில் 30 பேர் 25 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பெரிய மருத்துவக் கல்லூரிகளுக்கும், 20 பேர் சிறிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பாதுகாப்புக் கவச உடைகளை வழங்கிடுக - மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!