ETV Bharat / city

ரூ. 1.5 கோடியை எட்டிய அபராதம்! காவல்துறையின் முயற்சிகள் விழலுக்கிறைத்த நீரானது!

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 46 லட்சத்து ஆயிரத்து 994 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
author img

By

Published : Apr 22, 2020, 4:20 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு காவல்துறை

ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 28 நாட்களில் தமிழ்நாடு காவல்துறை 2 லட்சத்து 55 ஆயிரத்து 538 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 389 பேரை காவல்துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.

ஊரடங்கு அபராதம் வசூல்
ஊரடங்கு அபராதம் வசூல்

மேலும், 2 லட்சத்து 27 ஆயிரத்து 325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக ஒரு கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 994 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: என்னை இங்கே புதையுங்கள்... டாக்டர் சைமனின் கடைசி ஆசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.