ETV Bharat / city

40 வருடங்களுக்குப் பிறகு கல்லூரி நண்பர்களின் ரீ யூனியன் டூர் - college

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 40 வருடங்களுக்கு முன்பு படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

40 வருடங்களுக்குப் பிறகு கல்லூரி நண்பர்களின் ரீ யூனியன் டூர்

author img

By

Published : Oct 1, 2022, 7:03 PM IST

சென்னை: சேலம் மாவட்ட அரசு பொறியியல் கல்லூரியில் 40 வருடங்களுக்கு முன் படித்த மாணவர்கள் பொறியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின் தற்போது சுற்றுலா சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் 1979ஆம் ஆண்டு முதல் 1984ஆம் வரை பல்வேறு துறைகளில் ஒன்றாக படித்து முடித்த மாணவர்கள் மத்திய, மாநில அரசு துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

1984ஆம் ஆண்டு பிரிவில் பொறியியல் படிப்பை முடித்த பழைய மாணவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்அப் குழு மூலம் மீண்டும் ஒன்றாக இணைந்து அவர்களின் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

அந்த வகையில் பழைய மாணவர்கள் 22 பேரின் குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஒரு வாரம் சுற்றுலா முடித்துக் கொண்டு இன்று(அக்.1) அந்தமானிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் நாகராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது, “நாங்கள் அனைவரும் 1984ஆம் ஆண்டு சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பை முடித்து கடந்த 40 வருடங்களாக நண்பராக இருந்து வருகிறோம். நாங்கள் அனைவரும் மத்திய மாநில அரசு துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளோம்.

40 வருடங்களுக்குப் பிறகு கல்லூரி நண்பர்களின் ரீ யூனியன் டூர்

கல்லூரியில்லிருந்தது போல் நண்பர்களுடன் ஒன்றாக இருந்த போது, எங்களுக்கு 60 வயது கடந்தது நினைவில் இல்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். அதன்பின் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஜெயந்தி கூறுகையில், “நாங்கள் படிக்கும் போது இருந்ததை இப்போது மிகவும் வயதாகிவிட்டது. இருப்பினும் இணைந்து சுற்றுலா சென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது அடுத்தடுத்து தொடரும் மற்றவர்களும் எத்தனை வயது கடந்தாலும் அவர் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: 73 வயது முதியவருக்கு காது குத்திய மகள்கள்....நெகிழ்ச்சி சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.