இவ்விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், " 2020-21 மாணவர் சேர்க்கையில் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீடு முறை, உள்நோக்கத்துடன் பின்பற்றப்படவில்லை. தேசிய சட்ட பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் இடஒதுக்கீடு பூஜ்யம் சதவீதமாக உள்ளது.
மத்திய கல்வி நிறுவனம் பிரிவு 2006 மற்றும் யுஜிசி விதிகளின்படி கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு, கட்டாயமாக 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், இதை தேசிய சட்ட பல்கலைக்கழகம் பின்பற்றவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து, மேநிலை கல்லூரிகளில் நுழைய முடியாமல் போயுள்ளது.
எனவே, இதில் உடனடியாக தலையிட்டு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை களைந்து, தேசியளவில் அவர்களுக்கான 27% இடஒதுக்கீட்டையும், அந்தந்த மாநிலப்படியான இடஒதுக்கீட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ஆதிதிராவிடர் என்பதால் தரையில் உட்கார வைக்கிறார்கள்" - ஊராட்சித் தலைவரின் கணவர் பேட்டி