ETV Bharat / city

வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் கோபப்பட்ட ரமேஷ் கண்ணா!

சென்னை: வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர்கள் பட்டியலில் தனது பெயர் இல்லாதது யாருடைய தவறு என நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா கேள்வி ஏழுப்பியுள்ளார்

ரமேஷ் கண்ணா
author img

By

Published : Apr 18, 2019, 1:58 PM IST

தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

அவர்களுடன் நடிகர்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். இதனிடையே, நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோரது பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இல்லாததாதல் அவர்களுக்கு ஓட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது

இது குறித்து ரமேஷ் கண்ணா வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது,

இன்னோரு சர்கார் வந்தால்தான் திருந்துவிங்களா - ரமேஷ் கண்ணா கேள்வி

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தனர். இன்று நான் நாகர்கோயிலுக்கு பயணம் செய்யவிருப்பதால், என் கடமையை நிறைவேற்றுவதற்காக, எனது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வாக்களிப்பதற்காக காலை ஆறு மணிக்கே சென்றுவிட்டேன். காலை 7 மணிக்கு வாக்களிப்பு தொடங்கிய நிலையில், என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் எனக்கு ஓட்டு இல்லை என தெரிவித்தனர்.

வாக்காளர் அடையாள அட்டை என்னிடம் இருந்தும், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லாமல் போனதற்கு, காரணம் நான் இல்லை. அதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. கள்ள ஓட்டை தடுப்பதற்கு 49 ஏ என்ற சட்டம் சர்கார் திரைப்படம் வந்த பிறகுதான் மக்களுக்கு தெரிந்ததது.

அதுபோல வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது குறித்து சர்கார் போன்ற படம் எடுத்தால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பினார்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.