நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது விழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தி உலகம் முழுவதும் மிலாது விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோன்று அம்பத்தூரில் சர்வ சமய மத மதநல்லிணக்க பேரணி நடைபெற்றது. நபி நேச பேரவைத் தலைவர் முஹம்மது யஹ்யா மஸ்லஹி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை முகமது உஸ்மான் சிராஜி தொடங்கி வைத்தார்.
இதில் நபிகள் நாயகத்தின் பெருமையை போற்றியும் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த பேரணி புதூர் காமராஜர் தெருவில் உள்ள தர்காவில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புதூர் தர்காவில் முடிவடைந்தது.
இதையும் படிங்க:
அரசு உதவிக்காக காத்திருக்கும் அகல் விளக்கு தயாரிக்கும் பெண்மணி!