ETV Bharat / city

தொடங்கியது மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல்

வருகின்ற 4ஆம் தேதி காலியாகவுள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று(செப். 15) அதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

rajyashaba-nomination-started-yesterday
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வரும் செப்18 துவங்குகிறது
author img

By

Published : Sep 16, 2021, 3:57 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் அக். 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இத்தேர்தலுக்கு, நேற்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் செப்.22, செப். 23ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்.4ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை நடைபெறும். மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்.18ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலூம், காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை தேர்தல் நடத்தும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியால் வேட்புமனு பெறப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.