ETV Bharat / city

திகைக்க வைக்கும் எம்.பி.க்களின் சொத்துவிவரங்கள் - ப. சிதம்பரத்தின் சொத்துமதிப்பினை அறிவீர்களா? - சிவி சண்முகம்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Chidambaram
Chidambaram
author img

By

Published : Jun 2, 2022, 5:59 PM IST

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவுள்ள 6 பேரின் சொத்து விவரங்களைத் தற்போது பார்க்கலாம்...

எஸ்.கல்யாணசுந்தரம்: தஞ்சையைச் சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரத்தின் பெயரில் 43 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், அவரது இரு மனைவியர் பெயரில் 113 சவரன் தங்க, வைர நகைகள் உள்பட 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளன. கல்யாணசுந்தரம் பெயரில் 3 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும், மனைவிகள் பெயரில் 1.39 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளதாகவும், கல்யாணசுந்தரம் பெயரில் 4.5 லட்சம் ரூபாயும், மனைவிகள் பெயரில் 20 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயும் கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரிராஜன்: திமுக வேட்பாளர் கிரிராஜன், அவரது பெயரில் 1.53 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகள், 5 கோடியே 12 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள், மனைவி பெயரில் 1 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள், 39.47 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள், கிரிராஜன் பெயரில் 3.17 கோடி ரூபாய் கடனும், மனைவி பெயரில் 2.87 கோடி ரூபாய் கடனும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்: திமுக வேட்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தனது பெயரில் 17.15 லட்சம் ரூபாய் அசையும் சொத்துகள், 78 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள், மனைவி பெயரில் 27 லட்சம் ரூபாய் அசையும் சொத்துகள், 47 லட்சம் மதிப்பு அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்: காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட 135 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன என்றும், பரம்பரை சொத்து உட்பட 5.83 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளதாகவும், 76 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது மனைவி பெயரில் ஆயிரத்து 457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட 17.39 கோடி ரூபாய் அசையும் சொத்துகள், 26.53 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாகவும், 5 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி. சண்முகம்: அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்துக்கு 8.76 லட்ச ரூபாய் அசையும் சொத்து, 18.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, மனைவி பெயரில் 27.22 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து மற்றும் தாயார் பெயரில் 61.84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து உள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தர்மர்: அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில், 14.49 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து, 62.37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து, மனைவி பெயரில் 17 லட்சம் ரூபாய் அசையா சொத்து, மகள்கள் பெயரில் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக செயல்படும் ஓய்வு விடுதிகளை மூடக்கோரிய மனு: வனத்துறை பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.