ETV Bharat / city

ராஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் யார்? - seven convicts news

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுவர் யார்? (அல்லது) யார் அந்த ஏழு பேர்?

author img

By

Published : Feb 2, 2021, 3:25 PM IST

Updated : Feb 2, 2021, 3:50 PM IST

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 26 பேரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டது . அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு அந்த 26 பேரில் ஏழு பேர் தவிர மீதமுள்ள 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக தொடர்ப்பட்ட வழக்கில் ஆளுநர் இந்த வாரத்தில் முடிவெடுப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று (பிப். 2) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், எழுவர் விடுதலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

யார் அந்த எழுவர்?

1. பேரறிவாளன்

இந்தக் கொலை வழக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்த 19 வயது இளைஞராக இருந்த பேரறிவாளனும் ஒருவர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் 1971 ஜூலை 30இல் பேரறிவாளன் பிறந்தார். அறிவு என அழைக்கப்படும் இவரது பெற்றோர் குணசேகரன் என்ற குயில்தாசன், அற்புதம் அம்மாள். பேரறிவாளன் இ.சி.இ., பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றார். சிறையிலிருந்த போது இக்னோ பல்கலை தொலைக்கல்வியில் பி.சி.ஏ., எம்.சி.ஏ., முடித்தார்.

ராஜிவ் கொலைவழக்கு தொடர்பாக 1991, ஜூன் 11இல் கைது செய்யப்பட்டார். 18ஆவது குற்றவாளியான இவருக்கு 2011இல் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டது. பேரறிவாளனுக்காக அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.

2. முருகன்

இவர் 14.6.1991இல் கைது செய்யப்பட்டார். வழக்கில் 3ஆவது குற்றவாளி எனச் சேர்க்கப்பட்டவர். 1991 பிப்வரியில் தமிழ்நாடு வந்த முருகன், முதலில் கோடியக்கரை மிராசுதார் சண்முகம் வீட்டில் தங்கினார். பின் சென்னை வந்து பாக்கியநாதன் குடும்பத்திடம் அறிமுகமானார். நளினியை காதலித்தார். சிவராசன் திட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். சம்பவத்திற்குப் பின் சி.பி.ஐ., தேடி வருவது தெரிந்ததும், நளினியுடன் ஓடி ஒளிந்தார். திருப்பதியில் மொட்டை அடித்துவிட்டு வரும் போது, பஸ்சில் பிடிபட்டார்.

ராஜிவ் கொலைக்குற்றத்தில் முக்கிய தொடர்புடையவர். சிவராசனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தவர். சென்னை நந்தனத்தில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்., பொதுக் கூட்டத்திற்கு தனு, சுபா, நளினி ஆகியோரை அழைத்து சென்று ஒத்திகை பார்த்தவர். புலிகளுக்கு வயர்லெஸ் மூலம் தகவல்களை அனுப்பியவர்.

3. நளினி

முருகன் மனைவியான நளினிதான் இந்த வழக்கில் முதல் குற்றவாளி எனச் சேர்க்கப்பட்டவர். இவர் முருகனுடன் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

பாக்கியநாதனின் சகோதரி. சென்னை அடையாறில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். முருகனை காதலித்துக்கொண்டிருந்த இவர், முருகனுக்கும், சிவராசன் கூட்டாளிகளுக்கும் உதவியிருக்கிறார்.

நளினிக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியே கூறிய சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்தன. அதுமட்டுமின்றி பிரியங்கா காந்தி தனது கணவர் வதோராவுடன் சிறைக்கு சென்று சந்திப்பும் நடத்தியுள்ளார்.

4. சாந்தன்

விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கைதானார். இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர், சிவராசனுடன் தமிழ்நாடு வந்து ராஜிவ் கொலையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

5. ராபர்ட் பயாஸ் என்ற குமாரலிங்கம்

ராபர்ட் பயாஸ் 1991ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி கைதானார். 9ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர், இலங்கையை சேர்ந்தவர். குடும்பத்துடன் சென்னை வந்து இவர் போரூரில் வீடு எடுத்து தங்கி, சிவராசன் கூட்டாளிகளுக்கு உதவியுள்ளார். பயாஸ், முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

6. ஜெயக்குமார்
இலங்கை தமிழரான ஜெயக்குமார், 1991ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி கைதானார். 10ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர், ராபார்ட் பயாசின் சகோதரி கணவர். இவர் மூலமே, புலிகளின் உளவுபிரிவுத் தலைவருக்கு வயர்லெஸ் மூலம் தகவல்கள் அவ்வப்போது அனுப்பப்பட்டுள்ளன.

7. ரவி என்ற ரவிச்சந்திரன்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவி, 16ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர். 1988ல் கிட்டு உள்ளிட்ட புலிகள் வெளியேற்றப்பட்ட போது, 15 வயது சிறுவனாக இருந்த ரவி இலங்கைக்கு சென்றார்.

அங்கே புலிகளுடன் பயிற்சி பெற்று வந்த ரவி. சிவராசனுடன் 1991ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். இவரது தலைமையில் தனி தமிழ்நாடு கோரி போராடுவதற்காக புரட்சி படை அமைக்கப்பட்டது.

புரட்சிப்படையை அமைத்த ரவி, சிவராசனுக்கு இடங்கள் பார்த்துக் கொடுத்தது; வாகனங்கள் வாங்கி கொடுத்தது போன்ற உதவிகளை செய்தார். சம்பவத்திற்குப் பின் சிவராசன், சுபா ஆகியோருக்கு தப்பிச் செல்ல உதவியுள்ளார்.

இதையும் படிங்க...கூட்டத்தொடர் முழுவதும் புறக்கணிப்பு! - மு.க.ஸ்டாலின்

Last Updated : Feb 2, 2021, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.