ETV Bharat / city

'தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது' - நடிகர் ரஜினிகாந்த் - Rajini kanth political update

rajini
rajini
author img

By

Published : Dec 3, 2020, 1:33 PM IST

Updated : Dec 3, 2020, 5:11 PM IST

13:14 December 03

'தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது'

வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 'கடந்த உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனத் தெரிவித்தார். இந்தாண்டு தேர்தல் சுற்றுப்பயணம் சென்று பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால், சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தேன்.  

இப்போது இல்லையென்றால், இனி, எப்போதும் மாற்றம் அமையாது. தமிழ் மக்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன். தமிழ் மக்களுக்காக எனது உயிரை கொடுப்பது மிக சந்தோஷம். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது.

மாற்றத்துக்காக மக்கள் எனக்குத் துணை நிற்க வேண்டும்; எனது வெற்றி மக்களின் வெற்றி;  தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது' எனத் தெரிவித்தார். 

இதையடுத்து ரஜினி தான் தொடங்கயிருக்கும் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்பவரை நியமித்துள்ளார்.  

இதையும் படிங்க: 'இப்போ இல்லனா எப்பவும் இல்ல!' - ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு

Last Updated : Dec 3, 2020, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.