தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் தனது 97ஆவது வயதில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை முதலே திமுக தலைவர் ஸ்டாலின், சுப. வீரபாண்டியன், ஆற்காடு வீராசாமி, அருள்நிதி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், பேராசிரியர் அன்பழகனின் உடலுக்கு தற்போது நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனின் மறைவு என்பது தமிழ்நாடு மக்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
பேராசிரியர் அன்பழகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஸ்டாலினுக்கும் ஆழ்ந்து இரங்கல். 60 ஆண்டுகள் அரசியல் வாழக்கையில் அவர் சம்பாதித்தது மதிப்பும் மரியாதையும்தான்" என்றார்.
இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை