CII (Confederation of Indian Industry) ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ராஜஸ்தான் அரசின் நாடு தழுவிய முதலீட்டாளர்களை முதலீட்டு ரோட்ஷோ ஈர்க்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 24,25 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறும் ராஜஸ்தான் அரசின் மெகா முதலீட்டு உச்சிமாநாடு இன்வெஸ்ட் ராஜஸ்தானின் முன்னோட்டமாக விரிவான முதலீட்டாளர் தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வில் பேசிய, ராஜஸ்தானின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சகுந்தலா ராவத், "இன்வெஸ்ட் ராஜஸ்தான் மாநிலத்தின் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் திறனை நோக்கி சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகளை ஊக்குவித்து, மாநிலத்தை ஒரு தொழில்துறை மையமாக மேம்படுத்துவதற்கான நமது முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான மைல்கல்லாக இந்த நிகழ்வு அமையும்" என்றார்.
ராஜஸ்தான் அரசு ஏற்கனவே டெல்லி, அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் முதலீட்டு ரோட்ஷோவெற்றிகரமான நடத்தியது. சென்னை ரோட்ஷோவிற்கு தமிழ்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த ராஜஸ்தானிகளிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது.
![விழாவில் ராஜஸ்தான் அமைச்சர் சகுந்தலா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-rajastan-7209106_27122021221314_2712f_1640623394_682.jpg)
2022ஆம் ஆண்டு ஜனவரி 24,25 தேதிகளில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்வெஸ்ட் ராஜஸ்தான் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மேலும், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சகுந்தலா ராவத் தலைமையிலான மாநில அரசின் பிரதிநிதிகள் குழு மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் ஆகியோர் சென்னை ரோட்ஷோவில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி, ராஜஸ்தானின் அபரிமிதமான வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: CM Speech: நமக்குள் உள்ளது தேர்தல் உறவு அல்ல கொள்கை உணர்வு; தா.பாண்டியனுக்கு ஸ்டாலின் புகழஞ்சலி...