சென்னை: மாநகராட்சியில் 2 ஆயிரத்து 71 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. மழைநீர் வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால், மழைக்காலங்களில் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்குகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், இந்த ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு பருவமழையின்போது மழைநீர் தேங்கிய இடங்களை தேர்வு செய்து, சுமார் 45 கி.மீ., நீளத்திற்கு வடிகார்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வரை சென்னையில் 338 கோடி ரூபாய் செலவில் 97 புள்ளி 9 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 361 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 177 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்விக்கொள்கையை அமைக்க 13 வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு!