சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், பட்டினப்பாக்கம், அண்ணா நகர், கோட்டூர்புரம், வடபழனி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.
இன்று காலை முதலே கனமழை தொடங்கி உள்ளதாலும், நேற்று பெய்த மழையால் சாலையில் தேங்கி உள்ள தண்ணீராலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
நேற்று (அக்.19) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது" எனத் அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: பலத்த மழையால் மீண்டும் ஸ்தம்பித்த ஹைதராபாத்... அடுத்த 4 நாள்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை!