ETV Bharat / city

ரஜினி அப்படியே இருக்க வேண்டும்: பொன். ராதாகிருஷ்ணன் - undefined

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அப்படியே இருக்க வேண்டும் எனமத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ராதா
author img

By

Published : Nov 9, 2019, 10:17 AM IST

தமிழ்நாடு பாஜகவின் மாநில, மாவட்ட, உள்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர ராவ், மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்தத் தலைவர் இல. கணேசன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "ரஜினிகாந்த் எதை மனதில் வைத்துக்கொண்டு பேசினார் என்று தெரியவில்லை. மத்திய அரசு மூலமாக அவருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கெளரவத்துக்கு பாராட்டு தெரிவிக்கக்கூடிய வகையில் அவரை நான் கடைசியாக சந்தித்துப் பேசினேன். அரசியல் ரீதியாக எதுவும் நாங்கள் பேசவில்லை.

வள்ளுவர் ஆரம்ப காலத்திலிருந்து தெய்வப் புலவராகத்தான் அறியப்பட்டாரே தவிர சாதாரண கவியாக அறியப்படவில்லை. அவர் எந்த ஆடையை உடுத்திக்கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நெற்றி முழுக்க உடல் முழுக்க திருநீறு அணிந்து தெய்வ வடிவம் போன்றுதான் அவர் நமக்கு அறிமுகமானார்.

அதனால் இனி எந்தவொரு தனி நபரும் எந்தவொரு அமைப்பும் அவருக்கு காவி கட்ட தேவையில்லை. ஏனென்றால் அவர் காவியோடுதான் இருந்தார். 'நீ பார்த்தாயா?' என்று கேட்டால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவருக்கு வடிவம் கொடுக்கப்பட்டபோது ருத்ராட்சம், விபூதி அணிந்து கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்" என்றார்.

எனக்கு காவி பூச முடியாது என்று ரஜினிகாந்த் பேசியது குறித்த கேள்விக்கு, "ரஜினியை காவிமயமாக்க வேண்டுமா? ஆக்க வேண்டிய அவசியமில்லை. யாரும் அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. என்னுடைய வேலை அது இல்லை. இன்றைய ரஜினி அப்படியே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களும் அதையே விரும்புகின்றனர். திருவள்ளுவரையும் ரஜினிகாந்தையும் காவிமயமாக்க முயற்கிகள் எதுவும் செய்யவில்லை" என பதிலளித்தார்.

Intro:Body:தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் உள்கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதர் ராவ் கலந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், "சூப்பர்ஸ்டார் அவர்கள் எதை மனதில் வைத்து கொண்டு பேசினார் என்று தெரியவில்லை. மத்திய அரசு மூலமாக அவருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கெளரவத்துக்கு பாராட்டு தெரிவிக்ககூடிய வகையில் அவரை நான் கடைசியாக சந்தித்து பேசினேன். அரசியல் ரீதியாக எதுவும் நாங்கள் பேசவில்லை.

வள்ளுவப் பெருந்தகை ஆரம்ப காலத்திலிருந்து தெய்வப் புலவராகதான் அறியப்பட்டாரே தவிர சாதராண கவியாக அறியப்படவில்லை. அவர் எந்த ஆடையை உடுத்திக்கொண்டிருந்தார் என்பது நமக்கு தெரியாது. ஆனால் நெற்றி முழுக்க உடல் முழுக்க திருநீர் அணிந்து தெய்வ வடிவம் போன்றுதான் அவர் நமக்கு அறிமுகமானார். அதனால் இனி எந்தவொரு தனி நபரும் எந்தவொரு அமைப்பும் அவருக்கு காவி கட்ட தேவையில்லை. ஏனென்றால் அவர் காவியோடுதான் இருந்தார். நீ பார்த்தியா எனேறு கேட்டால் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவருக்கு வடிவம் கொடுக்கப்பட்ட போது ருத்ராட்சம், விபூதி அணிந்து கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறோம்.

இதை அழித்தது யார். என்னுடைய கேள்விக்கு திராவிட முன்னேற்ற கழகம் பதில் சொல்லியாக வேண்டும். கலைஞரோட சிறு வயதில் அவரது தகப்பனாரோடு இருக்கும் புகைப்படத்தில் கலைஞர் நெற்றியில் திருநீறு இருக்கிறது. அவருடைய பாட்டானார் நெற்றியிலும் திருநீறு இருக்கிறது. இதை அழிப்பதற்கு அவர்கள் குடும்பத்தில் யாராவது சம்பதிப்பார்களா. நாம் அழிக்கணும் என்று சொல்லவில்லை. உலகத்துக்கு பொதுமறை தந்த வள்ளுவன் நெற்றியில் இருந்த திருநீறை அழிக்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

அதேபோல் அவர் அவருக்கென்று பிறந்தநாள் இருக்கிறது. இதை இன்னொரு நாள் கொண்டாடுவோம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா. வள்ளுவப் பெருந்தகையினுடைய பிறந்தநாள் வைகாசி மாதம். அந்த கொண்டாட்டம் சிறப்பாக வந்துவிடும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் மாட்டு பொங்கல் அன்று வைக்கிறார். அதுக்கு அர்த்தம் என்ன.

எல்லா உயிரினமும் போற்றப்பட வேண்டியவைதான். அதை இல்லை என்று கூறவில்லை. ஆனால் திருவள்ளுவரை மாடு என்று சொல்கிறார்களா. யார் இவர்களுக்கு உரிமையை கொடுத்தது. இவர்கள் பஞ்சமி நிலைத்தை காப்பாற்ற திருவள்ளுவரை இரையாக்குகிறார்கள்.

சூப்பர்ஸ்டார் அவர்களை காவி மையைமாக்க வேண்டுமா. ஆக்க வேண்டிய அவசியமில்லை. யாரும் அதற்கான முயற்சி எடுக்கவில்லை. மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. என்னுடைய வேலை அது இல்லை. சூப்பர்ஸ்டாரை காவிமயமாக்குவது என்னுடாய நோக்கமும் அல்ல பாரதிய ஜனதாவின் நோக்கமும் அல்ல. நல்ல மனிதர். ஆன்மிகமான மனிதர். தனக்குள் தெய்த்தை தேடக்கூடிய மனிதர். மனப்பக்குவம் கொண்ட சூப்பர்ஸ்டாரை நிறம் மாற்ற வேண்டிய தேவையில்லை. இன்றைய ரஜினி அப்படியே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களும் அதையே விரும்புகின்றனர். நீங்கள் கேட்ட கேள்விக்கு அந்த பதிலை அளித்திருப்பார். திருவள்ளுவரையும், ரஜினிகாந்தையும் காவி மயமாக்க முயற்கிகள் எதுவும் செய்யவில்லை.

முரசொலி நிலம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதற்கு தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும். தாசில்தார் கேள்வி கேட்டால் நான் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன் என்று தி.மு.க. தலைவர் கூறுகிறார். இன்றைக்கு பிரச்சைக்குரிய இடமாக முரசொலி அலுவலகம் மாறியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு உரிமைப்பட்ட நிலம் என்பதை திராவிட முன்னேற்ற கழகம் காட்ட தவறினார் அடுத்த நிமிடம் அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். அந்த இடம் யாருக்காக ஒதுக்கப்பட்டதோ அந்த தலித் சமுதாய மக்களுக்கு அது கொடுக்கப்பட்டே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால் தலித் சமுதாயத்தை சேர்ந்த அனைத்து மக்களையும் திரட்டிக் கொண்டுபோய் முரசொலி அலுவகத்தை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டிய பொருப்பு அனைத்து கட்சிக்கும் உண்டு.

முதலில் பாரதிய ஜனதா கட்சியை காவிமயமாக்குவது தப்பான விஷயம். நீங்கள் போட்டுள்ள கண்ணாடியை மாற்றிவிட்டு பாருங்க. அப்படியென்றால் தி.மு.க. வுக்கு கருப்பு கண்ணாடி இன்னொரு கட்சிக்கு பச்சை கண்ணாடி போடுவீங்களா. அதெல்லாம் போடுவீர்கள் என்று சொன்னால் எங்களுக்கு காவி கண்ணாடி போடுங்க. நீஙகள் என்ன கண்ணாடி எங்களுக்கு மாட்டிவிட்டாலும் எங்களுடைய பார்வை தெளிவாக இருக்கும். மனிதனை மனிதனாக பார்ப்பது. யாருக்கு என்ன தேவையோ அதை செய்யக்கூடிய அளவில்தான் இந்திய, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயல்படும்.

ஓர் அமைப்பு என்றிருந்தால் எல்லோரும் தான் கூப்பிடுவர்கள். அது அவர்களின் வேலை. செல்கிறோமா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்க யாரையும் கையை பிடித்து இழுக்க மாட்டோம். கருத்தை சொல்லி ஈர்ப்பதற்கு நாங்கள் முயற்சி செய்வோம். வரவேண்டும் என்று விரும்புகிறோம்.

ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரும்போது புதிய சரித்திரம் எழுதப்படும்" என்று கூறினார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.