18 வயதை நிறைவுசெய்த தகுதிவாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள 2021ஆம் ஆண்டுக்கான சிறப்புச் சுருக்க முறைத் திருத்தம் பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுத்துவருகிறது.
இந்தப் பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தமிழ்நாடு அளவிலான இணையவழி வினா - விடைப் போட்டி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டது.
இந்த வினா விடைப் போட்டியானது சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (டிச. 04) தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டது. இப்போட்டியின், முதற்கட்ட சுற்றின் மூன்று நிலைகள் கடந்த அக்டோபர் 25, 26 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.
அதில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 13 ஆயிரத்து 602 பேர் பங்கேற்றனர். அதன் முதல் சுற்றில் 36 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றுப் போட்டியானது, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பாகவே நடத்தப்பட்டு, அனைத்துச் சுற்றுகளும், யூ-ட்யூபில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கு நான்கு குழுக்கள் தேர்வுபெற்று, பொதுத் (தேர்தல்) துறையின் தலைமைத் தேர்தல் அலுவலரின் அலுவலக காணொலி அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் கலந்துரையாடினார்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் மாநில அளவில் வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று நடத்தப்படும் தேசிய வாக்காளர் தின விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ’தேவையான நிவாரண உதவிகளை மக்களுக்கு செய்துதர வேண்டும்’ - ஸ்டாலின்