ETV Bharat / city

ஆப்ரேஷன் கங்கா மன நிம்மதியை தருகிறது; தமிழிசை சௌந்தரராஜன் - indians in ukraine

உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மாணவர்களை மீட்கும் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மன நிம்மதியை தருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

puducherry-lt-governor-tamilisai-thanks-to-pm-modi-for-operation-ganga

author img

By

Published : Mar 2, 2022, 10:29 AM IST

சென்னை: உக்ரைன் நாட்டிலிருந்து ஹங்கேரி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த புதுச்சேரி மாணவி ரோஜா சிவமணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "மத்திய அரசின் கடுமையான முயற்சியால் உக்ரைன் நாட்டிலிருந்து நம் நாட்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 26 விமானங்களுக்கும் மேல் இயக்கப்பட்டுவருகிறது. நான்கு மத்திய அமைச்சர்கள் நேரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்ரேஷன் கங்கா திட்டம் மன நிம்மதியை தருகிறது. அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த ரோஜா சிவமணி என்னும் மாணவி மீட்கப்பட்டு சென்னை வந்துள்ளார். மேலும் 23 மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட உள்ளனர். இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மத்திய அரசோடு மாநில அரசுகளும் மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவது மகிழ்ச்சியாக அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் கங்காவை வேகப்படுத்த சி-17 விமானத்தை அனுப்பும் இந்திய விமானப்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.