புதுச்சேரி: நாடு முழுவதும் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏற்கனவே புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்காக அனைத்து குடும்பம் அட்டைதாரர்களுக்குமான அறிவிப்பு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று வெளியிட்டது.
அதில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு சென்னையில் இருந்து 16,000 பேருந்துகள்!