புதுச்சேரி : புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளவர் லட்சுமிநாராயணன். இவர் முதலமைச்சரின் பாராளுமன்ற செயலாளராகவும் உள்ளார். இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது : தமிழிசை