ETV Bharat / city

"நானும் தான் துபாய் போனேன்...ஆனால், அதை விளம்பரப்படுத்தலயே"- புதுச்சேரி முதலமைச்சர் பளீர் - வெளிநாட்டு பயணங்களை விளம்பரப்படுத்தவில்லை

சென்னை: தொழில் முனைவோருக்காக தானும் துபாய்க்கு பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் அதை ஒருபோதும் விளம்பரப்படுத்தியதில்லை என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

CM Narayanasamy
author img

By

Published : Sep 19, 2019, 10:50 PM IST

சென்னை விமானநிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,

நாளை கோவா மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக நடைபெறும் மாநில நிதி அமைச்சர்களின் மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய பொருளாதாரத்தில் சரிவு, தொழிற்சாலைகளின் மூடு விழாவால் மோட்டார் வாகனங்கள் விநியோகம் செய்பவர்கள் தங்களுடைய கடைகளை மூடிவிடும் நிலையில் சுமார் 10 லட்சம் தொழிலாளிகள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

நாளை மோட்டார் வாகன வரி சம்பந்தமான விவாதம் நடைபெறுகின்றது. அதுமட்டுமில்லாமல் கட்டுமானப்பணிகள் முடங்கி இருப்பதால் பல லட்சக்கணக்கான அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விற்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை. இப்படி ஒட்டுமொத்தமாக பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில் வரியைக் குறைக்க வேண்டுமென்று மாநில நிதி அமைச்சர்கள் எல்லாம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். இது சம்பந்தமாக கவுன்சிலில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று நாளை தெரியும். இதுபற்றி மத்திய நிதியமைச்சர் பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார். அதிலும் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தொழில் முனைவோருக்கான வெளிநாட்டு பயணமாக நானும் இரண்டு முறை துபாய் சென்றுள்ளேன். அதற்கு, மூலதனமும் வந்திருக்கிறது. ஆனால் நாங்கள் அதை விளம்பரப்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி!

Intro:சென்னை விமானநிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

Body:சென்னை விமானநிலையத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

நாளை கோவா மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி சமந்தமாக மாநில நிதி அமைச்சர் மாநாடு நடைபெறுகிறது இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது

இந்திய பொருளாதாரத்தில் சரிவு,மோட்டர் வாகன தொழிற்சாலைகள் மூடுவிழா,உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடு விழா மற்றும் மோட்டார் வாகனங்கள் வினியோகம் செய்கின்றவர்கள் தங்களுடைய கடைகளை மூடிவிடும் நிலையில் சுமார் 10 லட்சம் தொழிலாளிகள் வேலை இல்லாமல் அவதி படுகின்றார்கள் மாருதி மற்றும் லேலைண்ட் போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன இப்படிப் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றது நாளை மோட்டார் வாகன வரி சம்பந்தமான விவாதம் நடைபெறுகின்றன அதுமட்டுமில்லாமல் கட்டுமானப்பணிகள் முடங்கி இருக்கின்றன பல லட்சக்கணக்கான அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விற்க முடியாத நிலையில் இருக்கின்றனர் அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன இவர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இல்லை இப்படி ஒட்டுமொத்தமாக பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்ற இந்த நேரத்தில் வரியை குறைக்க வேண்டுமென்று மாநில நிதி அமைச்சர்கள் எல்லாம் கோரிக்கை வைத்திருக்கின்றோம் இது சம்பந்தமாக கவுன்சிலில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று நாளை தெரியும் இதுபற்றி மத்திய நிதியமைச்சர் பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார் அதிலும் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்தார்

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு பொதுத் தேர்வு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார் அது சம்பந்தமாக இப்போது பேச அவசியமில்லை என கூறினார்

தொழில் முனைவோருக்கான வெளிநாட்டு பயணம் நானும் இரண்டு முறை துபாய் சென்று உள்ளேன் மூலதனமும் வந்திருக்கிறது ஆனால் நாங்கள் அதை விளம்பரப்படுத்த வில்லை என தெரிவித்தார்

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.