ETV Bharat / city

PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Interpretation of BSBP school sexual harassment complaint

சென்னை: பி.எஸ்.பி.பி பள்ளி புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார்.

PSBB பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : May 24, 2021, 3:48 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும், இன்று மாலைக்குள் இறுதி முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

PSBB பள்ளியில் ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக பள்ளியில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பள்ளியும் ஒரு குழு அமைத்து உள்ளதாகவும் அவர்கள் உரிய விளக்கம் அரசுக்கு தெரிவிக்க உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறினார். ஏற்கெனவே இதுபோன்ற புகார் ஒன்று பள்ளி மீது இருப்பதால், கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிபட கூறினார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; ஆனால், விரைவில் அதற்கானப் பணிகள் ஆன்லைன் வாயிலாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகவே கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த அவர், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தனிக் கவனம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஜூன் 1ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்த கூடாது என்றும், பெற்றோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் லதா, பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் ஜெயந்தி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.