இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
"கரோனா வைரஸ் தொற்றுக்கு முதலமைச்சரையும் தெரியாது, பிரதமரையும் தெரியாது. மாநிலத்திலும் 200க்கும் மேற்பட்டவர்கள் எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்க கூடாது என்ற தடை இருக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், 234 பேர் உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மானியமாக ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும். அதே வேளையில், ரேஷன் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் வாரம்தோறும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகள் மட்டுமின்றி வெளியுலக தொடர்பை ஏற்படுத்த தொலைக்காட்சி பெட்டியும் வைக்க வேண்டும்.
எனவே, கரோனா நோய் தொற்றின் தீவிரம் அடங்கும்வரை மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறினார்.