ETV Bharat / city

நிர்வாகியை மாற்றக்கோரி அதிமுக தலைமை அலுவலகம் முன் போராட்டம்! - admk news

அதிமுக தலைமை அலுவலகம் எதிரே தென் சென்னை வடகிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆதிராஜாராமை மாற்றக்கோரி கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

Protest infront of AIADMK headquarters in chennai

author img

By

Published : Jan 30, 2021, 7:05 AM IST

சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் எதிரே மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராமை மாற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரால் 14 வருடம் கட்சியிலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட ஆதிராஜாராம் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளராக, நியமிக்கப்பட்டதைக் கண்டித்து 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கட்சியில் நீண்டகாலம் பணியாற்றியவர்களின் கட்சி பதவிகளைப் பறித்து தனக்கு வேண்டப்பட்ட செல்வந்தர்களுக்கு கட்சி பதவிகளைக் கொடுத்து, தேர்தல் வரும் நேரத்தில் கட்சியில் குழப்பம் விளைவிப்பதாகத் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையச் செயலாளர் மகாலிங்கத்திடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து, அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.