சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று அயோத்தியில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமற்றது எனக்கூறி, உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து விசிக, தமிழக வாழ்வுரிமை, மே17 இயக்கம் உட்பட 20க்கும் மேற்பட்ட கட்சியினர் எந்த வித அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவல்லிக்கேணி ஆய்வாளர் மருது கொடுத்த புகாரின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன் காந்தி, இளமாறன்,தெகலான் பாகவி உட்பட 26 பேர் மீது சட்ட விரோதமாக கும்பல் சேர்த்தல் உட்பட்ட 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: