தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள அவர், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க இருக்கிறார். முதலமைச்சருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், முதலமைச்சரின் செயலர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெளிநாடு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர், லண்டன் விமான நிலையம் சென்றதையடுத்து அங்குள்ள தமிழர்கள் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டம் நடத்தியதால் முதலமைச்சர், அமைச்சர்கள் மாற்றுப்பாதையில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போராட்டம் நடத்தியவர்கள் கையில் பதாகைகளுடன் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதனை எதிர்க்கிறோம் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.