சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஐந்து நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். அதற்காக, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு, மதியம் சென்னை வருகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை செல்கிறார்.
சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு, மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். பேரவை அரங்கில் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார், சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இவ்விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
1921ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டை நிறைவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தலைவர் வருகை - முழு உஷார் நிலையில் காவலர்கள்