ETV Bharat / city

சீன அதிபருக்கு தமிழ்நாட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு - Xi xinping in Chennai

சென்னை: தமிழ்நாடு வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Xi Xingping
author img

By

Published : Oct 11, 2019, 1:41 PM IST

Updated : Oct 11, 2019, 3:05 PM IST

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது. நேரடியாக சென்னை வரும் அவர், கிண்டியில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார்.

பின்னர் அங்கிருந்து பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தலைநகராக திகழ்ந்த கடற்கரை நகரமான மாமல்லபுரத்திற்குச் செல்கிறார். அவர் வருகையையொட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உற்சாக வரவேற்பு

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மதியம் 2.10க்கு, தனிவிமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து அவர் கிண்டி சோழா நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அங்கு சீன அதிபரை வரவேற்கும் பொருட்டு, இந்தியாவில் வாழும் சீன மக்கள் பெரும்பாலானோர் நட்சத்திர விடுதி முன் திரண்டுள்ளனர். அங்கிருந்து அவர் சாலைமார்க்கமாக மாமல்லபுரம் செல்லவுள்ளார்.

காரில் பயணம்

முன்னதாக விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் விதத்தில் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட மங்கல வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்த நிலையில் தனி காரில், ஜி ஜின்பிங் தனியார் விடுதிக்கு சென்றார். அந்தக் கார், சீன அதிபர் பயணிக்க தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட காராகும். எந்த ஆபத்து நேர்ந்தாலும் காரில் பயணிக்கும் முக்கிய பிரமுகருக்கு எவ்வித ஆபத்தும் நேராத வண்ணம் அந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.டிசி. கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

போக்குவரத்து மாற்றம்

வேளச்சேரி – கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்கள் சேவை தேவைக்கேற்ப சிறிது நேரம் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோன்று கிண்டி ரயில் நிலையத்திலும் பல்லாவரம் ரயில் நிலையத்திலும் சிறிது நேரம் ரயில் சேவைகள் தேவைக்கேற்ப ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் சாலை வழிப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாமே

சீனத் தலைவர்களின் சென்னை பயணங்கள்!

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 11, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.