ETV Bharat / city

பாரிமுனையில் தபால்நியை மேற்கூரை சரிந்து விபத்து! - மேற்கூரை

சென்னை: பாரிமுனை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தபால் நிலைய கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

post office
author img

By

Published : May 8, 2019, 6:45 PM IST

சென்னை பாரிமுனை பகுதியில் பழமைவாய்ந்த தபால்நிலைய கட்டடம் இருந்து வருகிறது. சில வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டடத்தின் மேற்கூரை இன்று மதியம் ஒரு மணியளவில் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ராஜாஜி சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் இந்த கட்டட வளாகத்துக்கு மிக அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். கட்டடத்தின் சரிவை தபால் நிலைய உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

விபத்து நடந்த தபால் நிலைய கட்டடம்

இதுபற்றி பேசிய தபால் நிலைய தலைமை அதிகாரி ஸ்ரீராம், "பயன்படுத்தப்படாத கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டடத்தை புதிப்பிப்பது அல்லது சரிப்படுத்துவது போன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Intro:

Body:சென்னை பாரிமுனையில் பயன்பாட்டில் இல்லாத பழமை வாய்ந்த தபால் நிலைய கட்டடத்தின் மேற்கூரை இன்று மதியம் 1 மணிக்கு சரிந்தது.

மக்கள் அதிகம் பயணிக்ககூடிய ராஜாஜி சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் கட்டிட வளாகத்துக்கு மிக அருகில் பேருந்து நிழற்குடை இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற வகையில் பேருந்து நிறுத்தத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து யாரும் அருகில் செல்லாதவாறு போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கட்டடத்தின் சரிவை தபால் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது பற்றி பேசிய தபால் நிலைய தலைமை அதிகாரி ஸ்ரீராம், " பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டடத்தை புதிப்பிப்பது அல்லது சரிப்படுத்துவது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.