ETV Bharat / city

ரஜினியை சந்தித்த அரசியல் ஆலோசகர்- பி.கே.வுக்கு செக்?

சென்னை: அரசியல் வியூக ஆலோசகரும், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளருமான கோவாவைச் சேர்ந்த சாவியோ ரோடிரிகுவிஸ் நடிகர் ரஜினிகாந்தை அவர் இல்லத்தில் சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

Savio Rodrigues
Savio Rodrigues
author img

By

Published : Mar 16, 2020, 3:17 PM IST

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாகத் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. அண்மையில் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசியவை குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை போயல் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான சாவியோ ரோடிரிகுவிஸ் (Savio Rodrigues) இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ரஜினிகாந்தின் பார்வையில் தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், மாற்றத்தை ஏற்படுத்த அவரின் பின்னால் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சாவியோ, தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என ரஜினி விரும்புவதாகவும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலன் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார். இளம் தலைவர்களை வளர்த்தெடுக்கும் ரஜினியின் சிந்தனை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

  • The one takeaway from my over an hour discussion with @rajinikanth was that at the heart of his intent is the need to serve the people of TN. I liked his vision of grooming young leaders from TN. His focus on education, employment and social welfare. There is a vision for TN. pic.twitter.com/rlJcPdCXb5

    — Savio Rodrigues 🇮🇳 (@PrinceArihan) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரஜினியுடனான இச்சந்திப்பு குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய சாவியோ ரோடிரிகுவிஸ், ”ரஜினியின் சிந்தனைகள் வெற்றிபெற ஆலோசனை வழங்கினேன். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினோம். நாட்டின் பல மாநிலங்களில் உள்ள மனிதர்களைச் சந்தித்துள்ளேன். ரஜினியிடம் பேசியதிலிருந்து தமிழ்நாடு குறித்து அவர் தெளிவான பார்வை கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்தும், ஊழலுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலையில் அவர் உள்ளார். இந்தப் போராட்டத்தில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த மக்களுக்கு நல்ல வாய்ப்பு. இரு பெரும் கட்சிகளும் வீழ்த்த முடியாதது என்று கூற முடியாது“ என்று கூறினார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வியூகம் வகுக்க பிரதான எதிர்க்கட்சியான திமுக, பிரசாந்த கிஷோரை களமிறக்கியுள்ள நிலையில், ரஜினிகாந்தை அரசியல் வியூக ஆலோசகர் சந்தித்திருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. சாவியோ ரோடிரிகுவிஸ் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: 'ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா... அது அவருக்கே தெரியாது': கலாய்த்த வடிவேலு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.