நிவர் புயலினால் உண்டாகும் பாதிப்புகளை தடுப்பதற்காக சென்னை காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். புயல் காரணமாக சென்னையில் இரண்டு நாள்களாக கனமழை பெய்தபடி இருந்தது. இதனால் சென்னை முழுவதும் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டன.
அதனை அப்புறப்படுத்தும் பணியில், மாநகராட்சியினருடன் இணைந்து காவல் துறையினரும் களத்தில் இறங்கி, மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் உள்ளிட்ட மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சென்னை காவல் துறையினர் பிரத்யேகமாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை ஆரம்பித்து, பொதுமக்கள் அவசர நேரங்களில் அழைப்பதற்காக செல்ஃபோன் எண்ணையும் வழங்கினர்.
அதனடிப்படையில், நேற்று காலையில் பணிக்கு வந்த அனைத்து உயர் அலுவலர்கள், காவலர்கள் இரவு வீடுகளுக்கு செல்லாமல், இன்று அதிகாலைவரை விழித்திருந்து தயார் நிலையில் இருந்தனர். இதனால் பொதுமக்கள் அழைப்பின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ’புயலால் விழுப்புரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை’: எஸ்.ராதாகிருஷ்ணன்