ETV Bharat / city

8 லட்சத்தை திருடிவிட்டு தப்ப முயன்ற ஊழியர்கள்: துரத்தி பிடித்த போலீஸ்

author img

By

Published : Aug 1, 2022, 9:40 PM IST

சுமார் 8 லட்சம் பணம், வெள்ளி பொருட்களை திருடி ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பி செல்ல முயன்ற ஊழியர்களை தலைமை காவலர் துரத்தி பிடித்து கைது செய்தார்.

வேலை பார்த்த கடையில் கைவரிசை காட்டிய ஊழியர்கள்

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள கோவிந்தப்பா நாயக்கர் தெருவில் இன்று (ஆக.01) அதிகாலை 4 மணியளவில் ரோந்துப் பணியில் பூக்கடை தலைமை காவலர் சஜீவ் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமாக பையுடன் கிருஷ்ண ஐயர் தெரு வழியாக நடந்து வந்த வட மாநில நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, அவரது பையில் லட்சக் கணக்கில் பணம், வெள்ளிக் காசுகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

அதைப் பற்றி கேட்டபோது தனது உரிமையாளருடைய கலக்‌ஷன் பணம் என தெரிவித்து, தனது உரிமையாளர் எனக்கூறிய நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்துள்ளார். பின்னர் வந்த அந்த நபரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவலர் காவல் வாகனத்தில் ஏற சொன்னார்.

அப்போது திடீரென இருவரும் தப்பியோட முயன்ற போது இருவரையும் தலைமை காவலர் சஜீவ் துரத்தி பிடித்து, பூக்கடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதே நேரம் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெரு பகுதியில் ஸ்டேஷ்ணரி கடை நடத்தி வரும் ஜாலம் சிங் ராஜ்புரோஹித் என்பவர் தனது கடையின் பூட்டைத் திறந்து பணம், வெள்ளிக் காசுகள் திருடப்பட்டுள்ளதாக பூக்கடை காவல் நிலையத்தில் காலை 6 மணியளவில் புகார் அளித்தார்.

தொடர்ந்து அதிகாலை சிக்கிய இருவரும் ஜாலம் சிங் கடையிலிருந்து பணம் மற்றும் வெள்ளிக் காசுகளை திருடிக்கொண்டு தப்ப முயன்றது காவலருக்கு தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவ்விருவரும் சகோதரர்களான ராஜா ராம் மற்றும் மிகா ராம் என்பது தெரியவந்தது.

மேலும், ஜாலம் சிங்-ன் கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ராஜா ராம் பணிக்குச் சேர்ந்து அவரது வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்ததும், நேற்று இரவு ஜாலம் சிங் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் வந்து உறங்கியுள்ளார்.

பின்பு சாவியைத் திருடி அவரது வீட்டை பூட்டிவிட்டு, கடைக்கு வந்து தனது சகோதரன் மிகா ராம் உதவியுடன் கடையிலிருந்த 7.87 லட்சம் பணம், 19 வெள்ளிக் காசுகள், சிறிய வெள்ளி விநாயகர் சிலை, இரண்டு பூட்டு மற்றும் இரண்டு செல்போன் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டு தப்பி ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டு வந்தபோது காவலரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை உரிமையாளர் ஜாலம் சிங்-டம் ஒப்படைத்ததுடன், கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இறைச்சி வாங்க சென்ற மூதாட்டியிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.