ETV Bharat / city

லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம்! - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

திரைப்பட போஸ்டர் ஒட்ட லஞ்சம் தர மறுத்த கார்த்தி ரசிகர் மன்றத்தினரை தாக்கிய தூத்துக்குடி போலீசார் மூவருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

hrc
hrc
author img

By

Published : Jun 17, 2022, 9:54 PM IST

சென்னை: நடிகர் கார்த்தி நடித்த ’தோழா’ திரைப்படம் வெளியான போது, தூத்துக்குடி கார்த்தி ரசிகர் மன்ற தலைவரான வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகியோரிடம் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய தலைமைக்காவலர் திரவிய ரத்தினராஜ், லஞ்சம் கேட்டுள்ளார்.

அவர்கள் லஞ்சம் தர மறுத்ததால் மூவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர். காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார், உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தலைமைக்காவலர் திரவிய ரத்தினராஜ் ஆகியோர் வெங்கடேஷ் உள்ளிட்ட மூவரையும் ஆபாசமாக திட்டியதுடன், கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக வெங்கடேஷின் சகோதரர் வழக்கறிஞர் கவாஸ்கர், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களில் இருந்து மூன்று போலீசாரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, போலீசாருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும், மூன்று போலீசாரிடமும் அபராதமாக தலா 2 லட்சம் ரூபாய் வசூலித்து, அந்த தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு 5 லட்சம் ரூபாயும், சீனிவாஸ் மற்றும் வெங்கடேஷுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:இந்திய கிராமப் பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகள் என்ன ? - ஐஐடி ஆய்வு முடிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.