சென்னை:பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (54)- ஹேமாவதி (50) தம்பதி. இவர்கள் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜூலை18) காலை பூ கடைக்கு வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், பர்தா அணிந்துபடி, அவசரம் அவசரமாக வீட்டு விஷேசத்திற்கு பூ வாங்குவது போல நுழைந்து 1000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
தங்களிடம் போதிய பூக்கள் இல்லாததால், பக்கத்திலுள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவதாக பூக்காரர் பாபு கூறி சென்றதும், அவர்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப் பொடியை ஹேமாவதியின் கண்களில் தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய பூக்காரர் பாபு நடந்தவை குறித்து ஹேமாவது கூறவே அதிர்ச்சிக்குள்ளானார். இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகைத் தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு திருநாள்' தினத்தையொட்டி குமரி கடற்கரையில் மணல் சிற்பம்!