ETV Bharat / city

கேடிஆர் வழக்கு: 3 நாள் விசாரணைக்குப் பின் அதிமுக நிர்வாகிகள் விடுவிப்பு - சைபர் கிரைம் காவல்துறை

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகத் திருப்பத்தூர், தருமபுரியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளைத் தனிப்படை காவல் துறையினர் மூன்று நாள்கள் விசாரணைக்குப் பின்பு விடுவித்தனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Jan 1, 2022, 8:58 AM IST

விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை இரு வழக்குகள் பதிவுசெய்துள்ளது.

ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 15 நாள்களாகக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

நெருங்கியவர்களின் செல்போன் உரையாடல்கள்

மேலும் அவருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நெருங்கிய உறவினர், அதிமுகவினர் உள்பட நண்பர்களின் அலைபேசி அழைப்புகளை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்காணித்துவருகின்றனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் விக்னேஸ்வரன், ஏழுமலை ஆகிய இருவரிடம் தனிப்படை காவல் துறையினர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி விசாரணை நடத்தினர்.

அதேபோல், தருமபுரியைச் சேர்ந்த பொன்னுவேல், ஆறுமுகம் ஆகியோரிடமும் தனிப்படை காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த நான்கு பேரையும் தனிப்படை காவல் துறை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து ரகசிய விசாரணை மேற்கொண்டது.

அதிமுக பிரமுகர்கள் விடுவிப்பு

இந்த நிலையில் கடந்த மூன்று நாள்கள் தனிப்படையினர் நடத்திய விசாரணை முடிந்து அதிமுக பிரமுகர்கள் நான்கு பேரும் நேற்று (டிசம்பர் 31) விடுவிக்க்கப்பட்டனர்.

3 நாட்கள் விசாரணைக்குப் பின்பு வெளிவந்த அதிமுக நிர்வாகிகள்
3 நாள்கள் விசாரணைக்குப் பின்பு வெளிவந்த அதிமுக நிர்வாகிகள்

விசாரணை முடிந்து காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தவர்களை முன்னாள் அமைச்சர் இன்பதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். மேலும், ராஜேந்திர பாலாஜியின் வழக்கு குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் தனிப்படை காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'மீண்டும் மிதக்கும் சென்னை! விடியா அரசின் அமைச்சர் ராஜினாமா செய்வாரா?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.