ETV Bharat / city

காவலரை கடத்திய கும்பல் - கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு - பணம் திருட்டு

சென்னையில் தலைமை காவலரை காரில் கடத்தி கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிய கும்பலை காவல் துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர்.

கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு
கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் திருட்டு
author img

By

Published : Aug 30, 2021, 3:15 PM IST

சென்னை: சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). இவர் மாநில உளவுத்துறையில் தலைமை காவலராக டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 28ஆம் தேதி ரவி பணிக்கு புறப்படும்போது அவ்வழியாக காரில் வந்த அவரது நண்பர் அஜய் விக்கி என்பவர் மெரினா கலங்கரை விளக்கம் வழியாக செல்வதாகவும், அங்கு இறக்கி விடுவதாக கூறியதையடுத்து ரவி அந்த காரில் ஏறியுள்ளார்.

பின்னர் காரில் பயணித்தபோது பின்புறமாக அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் ரவியின் முதுகில் ஊசி ஒன்றை போட்டுள்ளனர். உடனே மயக்கமடைந்த ரவியிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு, ஈ.சி.ஆர் சாலைக்கு அழைத்து சென்றனர்.

கூகுள் பே திருட்டு

அதனையடுத்து அவரது செல்ஃபோனிலுள்ள கூகுள் பே மூலமாக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அந்த கும்பல் திருடினர். மயக்கத்துடன் இருந்த ரவியை சுமார் 18 மணி நேரம் காரிலேயே வைத்து சுற்றிவிட்டு, பின்னர் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ரவி நேற்று (ஆக.29) சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், காவலர் ரவி கொடுத்த புகாரில் உண்மைத்தன்மை உள்ளதா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கடத்தியதாக கூறப்பட்ட அஜய் விக்கி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.