ETV Bharat / city

இறுதி ஊர்வலத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 6 பேர் கைது

தாம்பரத்தில் இறுதி ஊர்வலத்தில் இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு, அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் நாட்டு பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இறுதி ஊர்வலத்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

author img

By

Published : Apr 25, 2022, 1:09 PM IST

சென்னை: தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் விபத்தில் உயிரிழந்த அசோக்குமார் என்பவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசாந்த் என்பவரை, திடீரென ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

தப்பி ஓடிய அந்தக் கும்பல், காந்தி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்து, கையில் வைத்திருந்த பட்டாசுகளை மதுபானக் கடையில் வெடித்து ரகளையில் ஈடுபட்டனர்.

வழக்குப்பதிவு: இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆறு பேரை கைதுசெய்து, காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசாந்திற்கும், தாவீத் என்ற கார்த்திக் தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்த வந்ததாகவும், இதனால் பிராசாந்த்தை வெட்டியதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து தாவீத் என்ற கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான மோனிஷ், விக்னேஷ், ராஜேஷ், காலேஷ், பிரேம்குமார் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையும் படிங்க: 'தீப்பற்றி எரிந்த மின்சார ஸ்கூட்டர் - மக்கள் அலறியடித்து ஓட்டம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.