ETV Bharat / city

பிரைடு ரைஸ் தராததால் உணவக காசாளரைத் தாக்கிய காவலர்கள்

பிரைடு ரைஸ் தராததால் ஆத்திரமடைந்த காவலர்கள் உணவக காசாளரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 3, 2020, 12:27 AM IST

police fight issue
police fight issue

சென்னை: அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆரோக்கிய பவன் என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது. நேற்று முன்தினம் (அக். 01) இரவு அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி 5 நிமிடம் கூடுதலாக வாடிக்கையாளர்கள் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த வெற்றிவேலன், ஏழுமலை என்ற இரண்டு காவலர்கள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று, உணவக காசாளர் ஆறுமுகம் என்பவரை எச்சரித்து சென்றுள்ளனர். அதற்கு, வாடிக்கையாளர்கள் சாப்பிட்டவுடன் உடனடியாக உணவகத்தை மூடிவிடுவதாக ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உணவகத்தை மூடுவதற்கான ஆயத்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். மீண்டும் அங்கு வந்த காவலர்கள், பிரைட் ரைஸ் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பிரைட் ரைஸ் இல்லை எனச் சொன்னதால் காவலர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவலர்கள் போதையில் இருப்பது காசாளர் ஆறுமுகத்திற்கு தெரியவந்துள்ளது.

தொடர்ந்து காவலர்கள், ஆறுமுகத்தைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அவரின் பிறப்புறுப்பில் காவலர்கள் தாக்கியதால், ஆறுமுகம் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள வியாபாரிகள் காவலர்களைத் தடுக்க முயன்றுள்ளனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறுமுகம், இந்தச் சம்பவம் தொடர்பாக, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் ஆய்வாளர் நசீமா தகராறில் ஈடுபட்ட இரண்டு காவலர்களை எச்சரித்ததாகவும், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக ஆறுமுகம் கூறினார்.

கரோனா காலத்தில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் வியாபாரிகளை காவலர்கள் தாக்குவது அராஜகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் காவலர்கள் காசு கொடுக்காமல் சாப்பிடுவதும், மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க : நீதிமன்ற உத்தரவின்படி பெரும்பாக்கத்தில் காவல் நிலையம் அமைக்க அரசாணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.