ETV Bharat / city

டூத் பிரஷை மாற்ற வந்த வாடிக்கையாளர்... சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

சூப்பர் மார்கெட்டில் பத்து ஆண்டுகளாக போலியான கணக்கு காட்டி பண மோசடி செய்து, வந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். போலி கணக்கு காட்டி, பல லட்சம் ரூபாய் திருடி, கார், வீடு வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

Police arrest
Police arrest
author img

By

Published : Jun 5, 2022, 5:33 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் சுரேஷ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். அவரது சூப்பர் மார்க்கெட்டில் ராஜேஷ் என்பவர் பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

ராஜேஷ், சுரேஷின் நம்பிக்கைக்குரியவராக இருந்துள்ளார். இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் டூத் பிரஷை மாற்ற வந்தபோது, அவரது பில்லில் ஐந்தாயிரம் ரூபாயும், கணினியில் 2 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், தவறாக கணக்கு காட்டி மோசடி செய்த ராஜேஷ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 5 லட்சம் ரூபாய் மட்டுமே தவறாக கணக்கு காட்டி திருடியதாக ராஜேஷ் ஒப்புக்கொண்டார். ஆனால், வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது, சுமார் 45 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருடிய பணத்தை திருப்பித்தருவதாக ராஜேஷ் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, கோயம்புத்தூரில் ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக ராஜேஷ் அளித்த வாக்குமூலத்தில், வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் பில் தொகையில் பாதியளவு தொகையை கணினியில் பதிவு செய்துவிட்டு, மீதியை திருடியதாகத் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தந்தை வேலை பார்த்த கடையில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்த ராஜேஷ், நன்றாக வேலை பார்த்து உரிமையாளரின் நம்பிக்கையினைப் பெற்றதால், அனைத்து கணக்கு பொறுப்புகளும் கிடைத்ததாகவும், அதனைப் பயன்படுத்தி சிறிது சிறிதாக திருடியதாகவும் தெரிவித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் வீடு, கார் என சொகுசாக வாழ்ந்து கொண்டு, உரிமையாளரிடம் ஏழை போல நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நகை வாங்குவதுபோல் நடித்து 10 சவரன் நகைகள் திருட்டு: CCTV-யினை வைத்து போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.