சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “ ஆந்திராவில் பெண்களுக்கெதிரான குற்ற வழக்குகளில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஏழு நாட்களுக்குள் வழக்கைப் பதிவு செய்து, 14 நாட்களில் விசாரணையை முடித்து, இருபத்தோரு நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது வரவேற்கப்படக் கூடிய ஒன்று.
தமிழ்நாட்டிலும் இதேபோன்று, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் நலன் என 13 அம்சங்கள் கொண்ட மசோதாவை 2013ஆம் ஆண்டு அமல்படுத்தனார். பெண்களுக்காகத் தனிக் குற்றவியல் நீதிமன்றங்களும் சில மாவட்டங்களில் கொண்டுவரப்பட்டன. அதை அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஆந்திராவைப்போல் இங்கும் பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைக் கிடைக்க வகைசெய்ய வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான இடங்கள் பேசி முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் இழுபறி ஏதுமில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்படும் “ என்றார்.
இதையும் படிங்க: என்கவுன்டரால் நீதி நிலைநாட்டப்படாது - எஸ்.ஏ. பாப்டே