சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (மே 7) தனது முகநூல் பக்கத்தில்:
"தமிழ்நாட்டின் 12-ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகள். விமர்சனம் செய்தல் (Criticize), ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூறுதல் (constructive), புதிய திட்டங்களை உருவாக்கி அரசுக்கு அளித்தல் (creative) என்று வகுத்துக் கொண்ட இலக்கணங்களுக்கு ஏற்ப பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் நலன் காக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.