சென்னை வரும் பிரதமர் மோடி, நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், 3,770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கிவைக்கிறார். அதோடு, சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4ஆவது ரயில் வழித்தடம், விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வரையிலான, மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதை ஆகியவற்றையும் தொடக்கிவைக்கிறார்.
தொடர்ந்து, 2,640 கோடி ரூபாய் செலவில் கல்லணை கால்வாயை புதுப்பித்து நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும், சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைக்கும் நிகழ்வும் நடக்க இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.5,569.70 கோடி கடன்!