ETV Bharat / city

எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இதுதான் முதல்முறை: தடம்பதிக்கும் மோடி! - எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு 33ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
author img

By

Published : Feb 26, 2021, 9:53 AM IST

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா இன்று (பிப். 26) நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதுவே முதல்முறை

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். மேலும், இவ்விழாவில் தமிழ்நாட்டில் இருக்கும் 34 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் இணையவழியே ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

அதன்மூலம், மருத்துவம், துணை மருத்துவம் படித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காணொலியில் பங்கேற்கின்றனர். இதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளையும், நிர்வாக ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார். மேலும் இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷையன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் 686 கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. பல்கலைக்கழகத்தில் இளநிலை-முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், ஆயுஷ், மருந்தியல், இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி), செயல்முறை மருத்துவம் (ஆக்குபேசனல் தெரபி), துணை மருத்துவப் படிப்பு என நூற்றுக்கணக்கான படிப்புகள் உள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்புகளை முடித்துள்ள 17 ஆயிரத்து 591 மாணவர்கள் சிறப்பிக்கப்படவுள்ளனர். அவர்களில் 71 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 41 மருத்துவக் கல்லூரிகள், 19 பல் மருத்துவக் கல்லூரிகள், 48 ஆயுஷ் கல்லூரிகள், 199 நர்சிங் கல்லூரிகள், 81 மருந்தியல் கல்லூரிகள், மருத்துவம் அல்லது அதனுடன் தொடர்புடைய மருத்துவப் படிப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.