ETV Bharat / city

குடிநீர் தொட்டிகளை அதிகரிக்க திட்டம் - சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்! - water issue

சென்னை: கோடை நாட்களை முன்னிட்டு குடிசைப் பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை அதிகரிக்க சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Chennai Metropolitan Water Supply
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம்
author img

By

Published : Apr 20, 2021, 5:36 PM IST

குடிசைப் பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து குடிநீர் வழங்கல் வாரியம் அலுவலர்கள் கூறுகையில், வடசென்னை, சிந்தாதிரிப்பேட்டை, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோடை காலத்தில் தண்ணீர் தொட்டிகள் அதிகமாக வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்தனர்.

இதனால் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், 250 தண்ணீர் தொட்டிகள் தேவைப்படும் இடங்களில் விரைவாக வைக்கப்படும். மேலும் எந்த பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படலாம் என ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சென்னை மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு போதுமானதாக இருப்பதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சென்னை மெட்ரோ வாரியம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. கடந்த டிசம்பரிலிருந்து சென்னையில் உள்ள எந்த ஒரு பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றார்.

இதையும் படிங்க: தண்ணீரைத் தேடி கன்றுகளுடன் இடம்பெயர்ந்த காட்டு யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.