சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.
அதில், “சென்னை கடற்கரை கொருக்குப்பேட்டை இடையே மூன்றாவது, நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்கள் சென்னை - திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லவிருக்கின்றன.
இது சென்னை கடற்கரை, கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் ரயில் பயணிகளின் சேவைக்காக அமைக்கப்படவுள்ளது. 506 சதுர மீட்டர் நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிலையில் உள்ளன” எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரயில் பயணம் செய்து ஆய்வு செய்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்