ETV Bharat / city

முதுகலை ஆசிரியர் தேர்வின் Answer Key வெளியானது - Teacher Exam committe

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு உத்தேச விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் Answer Key வெளியானது- ஆட்சேபனை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Apr 10, 2022, 2:06 PM IST

Updated : Apr 10, 2022, 2:48 PM IST

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் போன்ற பணிகளுக்கு நேரடி நியமன தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்புகளின் மீது தேர்வர்கள் வரும் 13ஆம் தேதி வரையில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2020-2021ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 2 லட்சத்து 13 ஆயிரத்து 893 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வர்கள் வினத்தாள் மற்றும் பதிலளித்த விடைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை www.trb.tn.nic.in இணையதளத்தில் இருந்து பதிவேற்றிக் கொள்ளலாம். அத்துடன் தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகளும் அனைத்து பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆட்சேபனை உள்ளவர்கள்: விடை குறிப்பின் மீது தேர்வுகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் மூலம் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள், ஆதாரம் இருந்தால் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

கையேடுகள் மற்றும் தொலைதூரக் கல்வி நிறுவன வெளியீடுகள், ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது. அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். மேலும் பாட வல்லுனர்களின் முடிவே இறுதியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு எதற்கு? - ஆசிரியர்கள் போராட்டம்

Last Updated : Apr 10, 2022, 2:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.